வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (29/07/2018)

கடைசி தொடர்பு:10:10 (29/07/2018)

”காவிரி கடலில் கலந்தால் தவறா? தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்லை?” - #CauveryFAQs

காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா?' எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது.

”காவிரி கடலில் கலந்தால் தவறா? தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்லை?” - #CauveryFAQs

காவிரியில் தண்ணீர் வராதபோது, ' கர்நாடகக்காரன் அரசியல் பண்றான்' என்றும், மழை மொழிந்து அதிகமாக தண்ணீர்வரும்போது, ' வீணாக காவிரி நீர் போய் கடலில் கலக்கிறது' என்றும் தமிழகத்தில் பரவலாக பேசப்படும். மூன்று வருடம்கழித்து, இப்போது தென்மேற்கு பருவமழை சக்கைப்போடு போட்டதின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவைஅடைந்து, காவிரியில் இருகரைகளை தொட்டுக் கொண்டு தண்ணீர் போகிறது. இப்போதும்,' காவிரியின் உபரி நீர் வீணாகபோய் கடலில் கலக்க போவுது' என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில், " கடல்தான் மழைக்கான ஆதாரம். இப்போது தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால்தான், மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் இவ்வளவு தண்ணீர்செல்கிறது. அப்புறம், கடலில் உபரி நீர் ' வீணாக' கலக்குதுன்னு சொல்றது கொடுமை. கடலுக்கு போகும் தண்ணீரை ' வீண்' என்று சொல்பவர்கள் தண்ணீரை வியாபாரமாக்குபவர்கள் வீண் என்ற சொல் அத்தகையவர்களின் பொருளாதார சொல்லாடல்" என்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் வெடிக்கிறார்கள்.

காவிரி

 

ராமலிங்கம்

இதுபற்றி,நம்மிடம் பேசிய நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் பாதிப்பு விவசாயிகள் சங்க கரூர் மாவட்டச் செயலாளராமலிங்கம், " இப்படி

' காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது ' ன்னு பேசும் ஆள்கள் விபரம் தெரியாத, இயற்கையின் சுழற்சியை அறியாதவர்கள். மழைநீர் கடலைச் சேர்வதுதான் இயற்கை. இந்தப் பூமியிலிருக்கும் அனைத்து உயிரினங்களும் தனக்குத் தேவையானதைஇயற்கைக்கு கேடில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்காக இயற்கைச் சுழற்சியை வீண் என்று சொல்வதுஎப்படி சரியாகும்? காவிரிப் பிரச்னை கடந்த 2 நூற்றாண்டுகளாக இருப்பது. ஆனால், காவிரி? அது பல ஆயிரம் ஆண்டுகள்வயதுடையது. காவிரி நீர் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது மலை, காடு, கடல் என பல உயிரினங்களுக்கும்சொந்தமானது. நாமே எல்லா நீரையும் எடுத்துக் கொண்டால் கடல்வாழ் உயிரினங்கள் என்ன செய்யும்? என்றார்.

 

 

பொன்னையன்

அடுத்து பேசிய, தற்சார்பு விவசாயிகள் சங்க செயலாளர் கி.வே.பொன்னையன், இயற்கைச் சங்கிலியை உடைத்த மனிதன் அது தன் தவறென என உணராமல் மற்றவற்றின் மீது பழியும் போடத் துவங்கிவிட்டான். காவிரி தீர்ப்பில்கூட,' 10 டி.எம்.சி தண்ணீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வெறுமனே ஆற்றில் போகனும்' ன்னு என்ற உத்தரவு சொல்லப்பட்டிருக்கு. அதில், அதிகமாக தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது என்பது நமக்கு நாமே வெட்டிக் கொள்கிற சவக்குழி. அப்படி தடுப்பணைகள் கட்டி அவ்வளவு நீரை நாம் என்ன செய்ய முடியும்? கீழப்பவானி வாய்க்காலில்கூட 2300 கன அடிதண்ணீரைத்தான் கொண்டு போக முடியுது. எல்லா காவிரி கிளை வாய்க்கால்களிலும் அதிகபட்சம் இருபதாயிரம் கன அடிநீரைத் கொண்டு போக முடியும். 50 ஆயிரம் கன அடி நீரை, எங்கு நாம் தேக்குவது? கடலுக்குச் செல்லும் தண்ணீரை வீண் என்பது நுகர்வு கண்ணோட்டம்.

கர்நாடகாவில் 3 அணைகள் கட்டப்பட்டிருக்க, நாம் ஏன் ஒன்றே ஒன்று கட்டியிருக்கிறோம் என்றும் கேட்டிருக்கிறார்கள். அணைகளை சமவெளிகளில் கட்ட முடியாது. அதற்கேற்ற மேட்டுப்பாங்கான நிலம் வேண்டும். அப்படி தமிழகத்தில் இருந்தஓரிடத்தில் மேட்டூர் கட்டியிருக்கிறோம். அதன் கொள்ளளவு கர்நாடகாவின் 3 அணைகளின் கொள்ளளவுக்கு ஏறத்தாழசமமானது. மேட்டூரைத் தாண்டியபின் தமிழகத்தில் அணைகள் கட்ட சரியான இடமில்லை. கல்லணை கூட அணைகிடையாது. அது வரும் நீரை நான்காக பிரித்து விடும் மதகு போன்ற அமைப்புதான். அதன் அளவைப் பார்த்து அணைஎன்கிறோம்.

கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கின்றன. கிருஷ்ணராஜசாகர் அணை 45 டி.எம்.சி, கபிணி அணை 19.5 டி.எம்.சி, ஹேமாவதுஅணை 35 டி.எம்.சி. ஆனால், மேட்டூர் அணையின் கொள்ளளவு 95 டி.எம்.சி. மேட்டூர் அணை நிரம்பும் அளவு தண்ணீர்வருவதே எப்போதோ ஒரு முறைதான். இதில் இன்னும் அணைகள் கட்டினால், அதற்கு நீர் என்ன டேங்கர் லாரியிலாகொண்டு வர முடியும்? நாம் செய்ய வேண்டியது நம் நீர் நிலைகளை சரி செய்வது. அது செய்யாமல்தான் 2015 சென்னைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோம். அந்த நீர் முழுவதையும் கடலுக்கு அனுப்பினோம். அது போலதான் தமிழகம் முழுவதும். நம் ஏரிகள், குளங்களை சரி செய்வதுதான் செலவும் குறைவு. நலனும் அதிகம். அதனால், ' கடலில் வீணாகக் காவிரி நீர்கலக்கிறது' என்று சொல்லும் தண்ணீரை வியாபாரமாக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் உளறலை நாமும்செய்யக்கூடாது" என்று முடித்தார்.

 


டிரெண்டிங் @ விகடன்