சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய நூதன விழிப்பு உணர்வுப் பேரணி! | International Tiger Day awarness rally held in kovilpatti

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (29/07/2018)

கடைசி தொடர்பு:02:00 (29/07/2018)

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய நூதன விழிப்பு உணர்வுப் பேரணி!

சர்வதேச புலிகள் தினத்தினை முன்னிட்டு கோவில்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில்  ரோட்டரி சங்கம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில் சர்வதேச புலிகள் தின விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகளின் விழிப்பு உணர்வுப் பேரணியும் நடைபெற்றது. 

விழிப்பு உணர்வுப் பேரணி

ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி புலி இனங்களை பாதுகாக்கவும் அவற்றிற்க்கான வாழ்விடங்களை உருவாக்கவும் பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்திடும் வகையில் புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புலிகள் தின விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ``சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என 9 வகை புலிகள் இருந்தன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி ஆகியவை முழுவதும் அழிந்துவிட்டது. சுமத்ரான் வகை புலிகள் தற்போது அழியும் நிலையில் உள்ளன. நம் நாட்டின் தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாக்க 49 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள்

தோல், பற்கள், நகங்களுக்காக புலிகள்  வேட்டையாடப் படுகிறது. காடுகள் அழிப்பு, மரங்கள் வெட்டப்பட்டு குடியிருப்புகளாக மாற்றுதல் ஆகிய காரணங்களால் புலிகள் எண்ணிக்கை மட்டுமல்ல, வன விலங்குகள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. மொத்தத்தில் காடுகள் அழிக்கப்படாமல் இருந்தால் புலிகளின் எண்ணிக்கையும் மற்ற வன விலங்குகளின் எண்ணிக்கையும் பெருகும். எனவே, காடுகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும், புலிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் சிறப்புகள்’’ ஆகியவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன.

"புலிகள் வாழ்வதற்கு ஏற்ற வாழ்விடங்களை பாதுகாப்பேன், புலிகளுக்கு எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்துவேன், புலி இனங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவேன்" எனக்கூறி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, புலி முகமுடி அணிந்த 50 மாணவர்கள் என, 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி முன்பிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்பு உணர்வு கோஷங்கள் எழுப்பிபியபடியே  ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close