தஞ்சையில் சிலிண்டர் வெடித்து விபத்து! - 18 வீடுகள் தீயில் எரிந்து நாசம் | Tanjore: 18 housed gutted in Cylinder blast

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (29/07/2018)

கடைசி தொடர்பு:00:00 (29/07/2018)

தஞ்சையில் சிலிண்டர் வெடித்து விபத்து! - 18 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

தஞ்சையில் சிலிண்டர் வெடித்ததில்  18 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில், மாரிசாமி என்பவர் மகளுக்கு திருமணம் நடக்க இருந்தது. இதற்காக சேர்த்து வைத்த நகை, புடவை மற்றும் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாயின. 

தீ விபத்து

தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலை அருகில் மேட்டு எல்லையம்மன்கோவில் தெரு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கூரை மற்றும் ஓட்டு வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று திடீரென அங்குள்ள ஒரு கூரை வீட்டிலிருந்த சிலிண்டர் ஒன்று வெடித்தில், தீப்பற்றியது. இதில், அருகருகே உள்ள வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால், பொதுமக்கள் கூச்சலிட்டு, மற்ற வீடுகளில் இருந்த பொருட்களையும், சிலிண்டர்களையும் வீட்டுக்கு வெளியே தெருக்களில் எடுத்து வைத்தனர். இந்தத் தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள் இரு வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து

இந்த தீ விபத்தில்  18 பேரின் கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள், துணிகள், சமையல் பாத்திரங்கள், சமையல் பொருள்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் எரிந்தது. இந்த விபத்தில், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.மேலும், அப்பகுதியில் வசித்து வந்த மாரிசாமி என்பவரின் மகள் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவிருந்த நிலையில், அதற்காக நகைகள், சேலைகள், பத்திரிகை அச்சடித்து அனைத்தையும் வீட்டில் வைத்து இருந்தார். இந்த தீ விபத்தில் இவை அனைத்தும் எரிந்து சேதமடைந்ததால், அந்த குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர். இந்த சம்வத்தால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சோகத்தில் மூழ்கினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க