`கருணாநிதி மீண்டு வருவார்’ -கவிஞர் வைரமுத்து நம்பிக்கை

திமுக தலைவர் கருணாநிதி இரத்த அழுத்த குறைவு காரணமாக  நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை நிர்வாகம்,  தீவிர மருத்துவ கண்காணிப்பில் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவித்தது. 

கருணாநிதி உடல்நலம் குறித்து வைரமுத்து

இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப்  பலர் மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்துச்  சென்றனர். இந்நிலையில் இன்று இரவு மருத்துவமனை வந்த கவிஞர் வைரமுத்து ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார் . 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து,   “திமுக தலைவர் கருணாநிதி பழைய போராட்டங்களில் எல்லாம் எப்படி வென்றாரோ அது போன்று நோய்க்கு எதிரான போராட்டத்திலும் வென்று மீண்டு வருவார் . நாங்கள் எல்லாம் காத்துக்கொண்டு இருக்கிறோம் . உலக தமிழர்களே, 70 ஆண்டுக்காலம்  தமிழர்களுக்காகவும்  தமிழுக்காகவும் தனது வாழ்வையை அர்ப்பணித்த தலைவர் இன்று உடல்நலம் குன்றி இருக்கிறார். உலகமெங்கும் வாழும் தலைவர்கள், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அவர் வாழ வேண்டும், மீள வேண்டும் என்று வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்துகளுக்கு வலிமை இருக்கும். கருணாநிதி, மீண்டு வருவார்” என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!