வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (29/07/2018)

கடைசி தொடர்பு:06:30 (29/07/2018)

`மக்கள் பணத்தை வாராக்கடனாக வழங்குகிறார்கள்' - கனரா வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சாடல்!

வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இருக்கிறது பி.ஜே.பி மோடி அரசாங்கம் எனக் குற்றம் சாட்டுகிறார் கனரா வங்கியின் அகில இந்திய பொதுச் செயலாளர்  வெங்கடாச்சலம்.

Canara bank state conference meeting

 "கனரா வங்கி ஊழியர்களின் ஒன்பதாவது மாநில மாநாடு காரைக்குடி பி.எல்.பி பேலஸ் மண்டபத்தில் தோழர் என்.சம்பத் அரங்கில் நேற்றும், இன்றும்(ஜூலை 28 மற்றும் 29) நடைபெறுகிறது.

இதில் கனரா வங்கி ஊழியர்களின் அகில இந்திய பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் பேசும் போது, ``பி.ஜே.பி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு முதலாளிகளுக்கான அரசாகத் தான் இருக்கிறது. சாதாரண வாடிக்கையாளர்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறது.  விஜய் மல்லையா, அதானி, வேதாந்த நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை 80 சதவீதம் வரைக்கும் வாராக்கடனாக ஆடித்தள்ளுபடி போல் வாரி வழங்குகிறார்கள். ஆடி தள்ளுபடி கூட  பத்துமுதல் நாற்பது சதவீதம் வரைக்கும் தான் தள்ளுபடி கொடுப்பார்கள்.

10 கோடி வாடிக்கையாளர்கள்  கொண்டிருக்கிறது கனரா வங்கி. 115 லட்சம் கோடி ரூபாய் வரவு செலவு செய்யும் இந்த வங்கியில் இரண்டு லட்சம் காலியிடங்கள் இருக்கிறது. பி.ஜே.பி அரசாங்கம்,  தனியாருக்கு வங்கிகளைத் தாரை வார்க்க நினைக்கிறது அப்படி நடந்தால் ஒரே நேரத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இன்னும் ஐந்து லட்சம் கிராமங்களுக்கு வங்கி சேவை  சென்றடைய வேண்டியிருக்கிறது.  நடுத்தர மக்கள் தான் வங்கியில் பணத்தை சேமித்து வைக்கிறார்கள். அவர்கள் பணம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் 10 லட்சம் கோடி வாராக்கடனாக இருக்கிறது. விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி நீரவ்மோடி 14,500 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடு சென்று விட்டனர். வங்கிகளில் வாராக்கடன் வைத்திருப்பவர்கள் பெயரை நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க