`போதையில் மிரட்டல்; தெளிந்தப் பிறகு மன்னிப்பு!' - கோவை இளைஞரின் வைரல் வீடியோ

கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து போலீஸார், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மது போதையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை இளைஞர்

கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே, போக்குவரத்து போலீஸார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது, கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்த சுதர்ஷன் என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். அப்போது அவரை நிறுத்தி சோதனை செய்த போது, சுதர்ஷன் மது போதையில் இருந்தது தெரியவந்தது . இதையடுத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, போலீஸாரிடம் சுதர்ஷன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "குடிச்சுட்டு வருவேன்.. அது என் இஷ்டம். ஃபைன் போடுங்க.. நான் கட்டிக்கிறேன். என் பெரியப்பா ஒரு ஜட்ஜ். தில் இருந்தால், இந்த வீடியோவ ஃபேஸ்புக்ல போடுங்க பார்ப்போம்.. அப்பறம் என்ன நடக்குதுனு பாருங்க" என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸார், ரத்தினபுரி போலீஸாருக்கு இதுதொடர்பாக தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அவரை கைது செய்தனர். போதை தெளிந்த பிறகு, தான் செய்தது தவறு என்று அவருக்கு தெரிந்தது. காவலர்களின் பணி குறித்தும் சுதர்ஷன் வருத்தத்துடன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், விபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை  ஓட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!