ஆவடி எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மை உடைத்துக் கொள்ளை! - போலீஸ் ஏ.சி. அலுவலகம் அருகே நடந்த சம்பவம் | Unidentified persons Steals Lakhs Of Rupees From Avadi SBI ATM

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (29/07/2018)

கடைசி தொடர்பு:10:04 (29/07/2018)

ஆவடி எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மை உடைத்துக் கொள்ளை! - போலீஸ் ஏ.சி. அலுவலகம் அருகே நடந்த சம்பவம்

ஆவடியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த லட்சக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம்

ஆவடியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை எச்.வி.எஃப் சாலையில் அமைந்துள்ளது. பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக இந்த வங்கி தொடங்கப்பட்டது. எஸ்.பி.ஐயின் இந்த கிளையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். வங்கிக் கிளை வளாகத்தில் ஏ.டிஎம் செயல்படுகிறது. இங்கு 4 ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளன. இந்தநிலையில், அவற்றில் பணம் நிரப்பப்பட்டிருந்த ஏ.டி.எம் இயந்திரம் ஒன்றை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அதிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.   கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இரவு நேர காவலர்கள் இல்லாததே ஏ.டி.எம் கொள்ளைக்குக் காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பில் உள்ள வங்கியில் கொள்ளை நடந்திருப்பது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த வங்கிக்கு அருகில்தான் ஆவடி போலீஸ் ஏ.சி. அலுவலகம் இயங்கி வருகிறது.