கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வெங்கையா நாயுடு சென்னை வருகை! #Karunanidhi | vice president venkaiah naidu to meet karunanidhi at chennai today

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (29/07/2018)

கடைசி தொடர்பு:08:58 (29/07/2018)

கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வெங்கையா நாயுடு சென்னை வருகை! #Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்தார். 

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசியல் தலைவர், திரைத்துறை பிரபலங்கள் என அனைவரும் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று நலம் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்தது. இதையடுத்து, அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர். 

காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு, தலைமை மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளது எனக் கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சித்தலைவர்களும், திரையுலகினரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்கத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். நண்பகல் 12.30 மணியளவில் மருத்துவமனைக்குச் செல்லும் அவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நேரில் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.