நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன், பின் பங்குச் சந்தை எப்படி இருக்கும்? | What will happen at Stock Market before and after Parliament Election? Kovai Nanayam Vikatan Conclave

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (30/07/2018)

கடைசி தொடர்பு:11:43 (30/07/2018)

நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன், பின் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

நாணயம் விகடன் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 18, 19 -ம் தேதிகளில் நடக்கும் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பங்குச் சந்தை ஆலோசகர் ஏ.கே. பிரபாகர் கலந்துகொண்டு பங்குச் சந்தை பற்றி பேசவிருக்கிறார். இந்தக் கான்க்ளேவ் பற்றிய கூடுதல் விவரங்களை - https://www.vikatan.com/special/tickets/nanayam-conclave/ - என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

கான்க்ளேவ்

நம் மக்களுக்கு பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், முதலீட்டு ஆலோசனைகள் போன்றவற்றை எளிமையான நடையில் தமிழில் நாணயம் விகடன் தொடர்ந்து வழங்கி வருகிறது. நாணயம் விகடன் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்னையில் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் கான்க்ளேவ் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கம், பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், பிற மாவட்டத்தைச் சேர்ந்த வாசகர்களும் அதிகளவில் பங்கேற்று நிதி, பொருளாதாரம் தொடர்பான விஷயங்களைத் தெரிந்துகொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கோவையில் வரும் ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில்  ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் கான்க்ளேவ் நடத்தப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்திலும் பொருளாதார வளர்ச்சி நன்றாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், பங்குச்சந்தையின் எதிர்காலம், முதலீட்டுத் திட்டங்கள், வாய்ப்புகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஏற்றுமதி வாய்ப்புகள், வருவாய் பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு நிபுணர்கள், இந்த இரண்டு நாள் கருத்தரங்களில் தங்கள் உரை வீச்சுகளை எடுத்துரைக்க உள்ளார்கள். இது நமது வாசகர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்தரங்கின் முதல் நாளில் பங்குச் சந்தை ஆலோசகர் ஏ.கே. பிரபாகர் பங்கேற்று பங்குச் சந்தை, பங்கு முதலீடுகள் குறித்துப் பேச உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கலாம் என்பது பற்றி அவர் பேசவிருக்கிறார்.

ஏ.கே.பிரபாகர், தற்போது ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக உள்ளார். எம்.பி.ஏ (நிதி) பட்டதாரியான இவர், கடந்த 25 ஆண்டுகளாகப் பங்குச் சந்தை குறித்து பல்வேறு பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் பேசியும் எழுதியும் வருகிறார். நமது நாணயம் விகடனிலும் பங்குச் சந்தை தொடர்பாக தொடர்ந்து எழுதி வருகிறார்.

கான்க்ளேவ்

பங்குச் சந்தையின் எதிர்காலம், பங்குகளில் நீண்ட கால முதலீடு குறித்து தெரிவிப்பதில் வல்லுநராக திகழ்கிறார். இவர் பேசுவதைக் கேட்பதன்மூலம் பங்குச் சந்தை பற்றிய நமது அணுகுமுறை நாம் எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய தெளிவான முடிவு எடுக்க முடியும். ஏ.கே பிரபாகரின் உரையைக் கேட்டு பங்குச் சந்தைப் பற்றி தெளிவான பார்வையைப் பெற இன்றே இந்த கான்க்ளேவில் உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.