வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (30/07/2018)

கடைசி தொடர்பு:14:00 (30/07/2018)

தா.பாண்டியனை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

எடப்பாடி பழனிசாமி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், கடந்த ஜூலை 28-ம் தேதி தனது வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார். 

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா. பாண்டியனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது முதல்வர்,  தா.பாண்டியன் விரைவில் குணமடைய வேண்டும் எனக் கூறி அவருக்கு மலர்ச்செண்டு அளித்தார். 

இதற்கு முன்னதாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியை முதல்வர் எடப்படி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.