வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (30/07/2018)

கடைசி தொடர்பு:13:52 (30/07/2018)

`தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கருணாநிதிதான்!’ - மருத்துவமனையில் கண்ணீர்விட்ட நாஞ்சில் சம்பத் 

 `கருணாநிதியின் உடல்நலம் குன்றியிருப்பதைக் கண்டு கண்ணீர்வடிக்கிறேன்' என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

நாஞ்சில் சம்பத்
 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ,  நடிகர்கள் பாக்யராஜ், விக்ரம், சிவகுமார், சூர்யா, ஜக்கிவாசுதேவ் உள்ளிட்டவர்கள்  வந்தனர். மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்தனர். முதல்வர், துணை முதல்வர் மட்டும் கருணாநிதியை நேரடியாகச்சென்று பார்த்தனர். 

இந்நிலையில், காவிரி மருத்துவமனைக்கு வந்த நாஞ்சில் சம்பத், கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்த பின் மிகவும் உருக்கமாகப் பேட்டி அளித்துள்ளார். `தமிழகத்துக்கு என்னை அறிமுகம்செய்தவர் கருணாநிதிதான். எனது திருமணத்தை நடத்திவைத்தவர் கருணாநிதி. பெரியாரின் தலை மாணாக்கராய், அண்ணாவின் தம்பியாய் விளங்கும் கருணாநிதி, உடல் நலிவுற்றிருக்கும் செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறேன். இளம்பருவத்திலிருந்தே என்னை ஆட்கொண்ட தலைவர் அசைவற்று படுத்திருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விரல் நோக எழுதியவர், குரல் தேய பேசியவர், கால் தேய நடந்தவர்.. பிடறுகின்ற சிங்கம் போல் எழுந்து வர வேண்டும் என யாசிக்கிறேன் அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கைதான் கருணாநிதி. அவர் உடல்நலம் குன்றியிருப்பதைக் கண்டு கண்ணீர்வடிக்கிறேன்' என்று  கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க