வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (30/07/2018)

கடைசி தொடர்பு:16:50 (30/07/2018)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வேதாந்தா நிறுவனக் கோரிக்கையை மறுத்த பசுமைத் தீர்ப்பாயம்

'ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்ய முடியாது' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

தேசிய பசுமை தீர்ப்பாயம்

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது, 13 பேரை காவல்துறை சுட்டுக்கொன்றது. அதையடுத்து, 'ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது' என்று தமிழ்நாடு அரசு ஆலையை மூடி சீல் வைத்தது.

மேலும், நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடுசெய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை ரத்துசெய்ய முடியாது' என்று உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.