படிக்கட்டில் பயணம்... ரயில்வே பாதுகாப்புப் படை அதிரடி முடிவு!

'பரங்கிமலை விபத்து எதிரொலியாக, 'ரயில் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தால், ரயில் பாஸ் ரத்துசெய்யப்படும்' என ரயில்வே பாதுகாப்புப்படை அதிரடியாக அறிவித்துள்ளது.

ரயில் விபத்து

சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான லோக்கல் ரயில் தாமதமாக வந்ததால், ரயில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இந்த ரயில், விரைவு ரயில் பாதையில் இயக்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததன்  காரணமாக, ரயிலின் படியில் நின்றுகொண்டு பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில் பரங்கி மலை ஸ்டேஷன் அருகே சென்றபோது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு, 'குறித்த நேரத்தில் ரயில் இயக்காததே காரணம்' என குற்றச்சாட்டு எழுந்தது.  இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர், லூயிஸ் அமுதன் விசாரணை நடத்திவருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரயில் படிகட்டில் நின்றுகொண்டு பயணம்செய்தால், ரயில்வே பாஸ் ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்வதன் ஆபத்தை உணர்த்தும் வகையில், பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன' என்று தெரிவித்தார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!