வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (30/07/2018)

கருணாநிதி மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும்..! இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்துக் கடிதம்

தி.மு.க தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டு எம்.பி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவருகின்றனர்.

இந்தநிலையில், இன்று இலங்கை எம்.பி ஆறுமகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவர்கள், மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அப்போது, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா எழுதிய வாழ்த்துக் கடிதத்தையும் அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தில், 'கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.