`கருணாநிதியின் உடல்நிலையைக் கண்டு மருத்துவர்கள் வியந்துள்ளனர்’ - திருமாவளவன் பேட்டி! | Doctors wondered about Karunanidhi's health - Thirumavalavan interview

வெளியிடப்பட்ட நேரம்: 22:34 (30/07/2018)

கடைசி தொடர்பு:22:48 (30/07/2018)

`கருணாநிதியின் உடல்நிலையைக் கண்டு மருத்துவர்கள் வியந்துள்ளனர்’ - திருமாவளவன் பேட்டி!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையைக் கண்டு மருத்துவர்கள் வியந்துள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

சென்னை காவேரி மருத்துவமனையில் கிச்சைப் பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு தரப்பினர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து வருகின்றனர். நேற்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, கருணாநிதியைக் காவேரி மருத்துவமனையில் நேரில் பார்த்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செயல் தலைவரிடம் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், `கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. ரத்த அழுத்தம் நாடித்துடிப்பு, இயல்பு நிலையில் உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவி இல்லாமல் சீரான நிலையில் அவரால் இயங்க முடிகிறது. இயல்பாக சுவாசிக்க முடிகிறது. குறிப்பாக, உள்ளுறுப்புகள் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இது அவருடைய மன உறுதி என மருத்துவர்கள் வியப்படைகின்றனர். ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டது, தொடர்ந்து அவராகவே மீண்டு வந்துள்ளார்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.