வெளியிடப்பட்ட நேரம்: 02:07 (31/07/2018)

கடைசி தொடர்பு:02:23 (31/07/2018)

போலி கணக்கு மூலம் வதந்தி - கனிமொழி வேதனை!

வதந்திகள் பரப்புவதை நிறுத்தக் கோரி நாளை சைபர் கிரைம் பிரிவில் கனிமொழி சார்பில் புகார் அளிக்கப்படவுள்ளது. 

உடல்நிலை நலிவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களை போல் முக்கிய பிரமுகர்களும் அவரது உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். அந்தவகையில், ஈஷா யோகா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் இந்து முன்னணி அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் நேற்று திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரித்தனர். அப்போது ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரை ஜக்கி வாசுதேவ் சந்தித்து பேசினார். 

இவர்களது சந்திப்பு தொடர்பாக, ``ஆன்மீகவாதிகள் கருணாநிதியை பார்க்க வேண்டிய அவசியமில்லை" எனக் கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் கூறியது போல் போட்டோஷாப் ஒன்று வைரலானது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கனிமொழி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ``கனிமொழி சொல்லாததை விஷமிகள் போட்டோஷாப் மூலம் பரப்புகின்றனர். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகின்றனர். உடனடியாக நிறுத்த வேண்டும். இது சம்பந்தமாக நாளை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்படவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க