`கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும்' - ஓ.எஸ்.மணியன் பேட்டி!

காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

அதிமுக


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி திடீர் ரத்த அழுத்தக் குறைவு காரணமாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாள்கள் ஆகின்றன. மேலும், சில நாள்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் எனக் காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை காவேரி மருத்துவமனைக்கு முன் குவிந்துள்ள தி.மு.க தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இதனிடையே, மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று விசாரித்தார். அதேபோல மத்திய, மாநில அமைச்சர்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அரை நூற்றாண்டுக் காலம் அரசியல் தலைவராக வாழ்ந்தவர் அவர். இன்றைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் செய்தி வருத்தம் அளிக்கிறது. மருத்துவ உபகரணங்கள் இன்றி அவரே தானாக சுவாசிக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பூரண நலம் பெற்று அவர் மீண்டு வர வேண்டும். நலமோடு இல்லம் திரும்பி ஆரோக்கியமாக வாழ வேண்டும்'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!