வெளியிடப்பட்ட நேரம்: 04:07 (01/08/2018)

கடைசி தொடர்பு:04:07 (01/08/2018)

காணாமல் போன செல்ல நாய்.. போஸ்டர் ஒட்டி தேடும் உரிமையாளர்கள்...!

தங்களது வீட்டில் ஓர் உறவாக வளர்ந்து, காணாமல் போன செல்ல நாய் குட்டியை மீட்பதற்காக, கோவையில் அதை வளர்த்தவர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.

தங்களது வீட்டில் ஓர் உறவாக வளர்ந்து, காணாமல் போன செல்ல நாய் குட்டியை மீட்பதற்காக, கோவையில் அதை வளர்த்தவர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.

ரஸ்கி

கோவை, ஆர்.எஸ்.புரம் பால்கம்பெனி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். தனியார் கல்லூரியில் படித்துவரும் இவர், தங்களது வீட்டில் “கோல்டன் ரெட்ரிவர்” ரகத்தைச் சேர்ந்த ஓர் நாயை வளர்த்து வந்தார். அதற்கு, “ரஸ்கி” என்று பெயர் வைத்தனர். கடந்த 7 ஆண்டுகளாக சஞ்சயின் வீட்டில் ஓர் உறவாக வலம் வந்துள்ளது ரஸ்கி. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, ரஸ்கி திடீரென காணாமல் போய்விட்டது. இதையடுத்து, ரஸ்கியை கண்டுபிடிப்பதற்காக, அதன் படத்துடன் சஞ்சய் குடும்பத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ரஸ்கியை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரஸ்கி

இதுகுறித்து சஞ்சயிடம் பேசியபோது, “ரஸ்கிய எப்பவும் ஃப்ரீயாதான் விட்ருப்போம். நைட் டைம்ல எங்க காம்பவுண்ட்லதான் சுத்திட்டு இருக்கும். லை 7-ம் தேதி காலைல பார்த்தப்ப ரஸ்கிய காணோம். கேட்டும் திறந்துருந்துச்சு. எங்க தேடியும் கிடைக்கல. சோஷியல் மீடியால ஆரம்பிச்சு, எல்லா வழிலயும் ரஸ்கிய தேடிட்டு இருக்கோம். அந்த நாய் கொஞ்சம் காஸ்ட்லி ரகம். அத தெரிஞ்ச யாரோதான் இப்படி பண்ணிருக்கணும். போலீஸ்லயும் சொல்லிருக்கோம். எப்படியாவது ரஸ்கிய மீட்டுட்டா போதும்” என்றார்.

ரஸ்கியைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 98439 85779 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.