கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் - மூன்று பேரை பரிந்துரைத்தது தேடுதல் குழு!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமிப்பது தொடர்பாக மூன்று பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை வேளாண் பல்கலைக்கழகம்

கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கே.ராமசாமி கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடையுள்ளதை அடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழு மூன்று பேரை இறுதி செய்துள்ளது. இதுதொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மகாத்மா வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள கே.பி.விஸ்வநாதா, கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக இருந்து சி.ராமசாமி மற்றும் வேளாண் ஆராய்ச்சி இந்திய கவுன்சில் செயலாளராக உள்ள த்ரிலோச்சன் மொகபத்ரா ஆகியோரை தேடுதல் குழு பரிந்துரைத்துள்ளது. 

மேலும் இந்த மூவரின் விவரங்கள் ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்யவுள்ளார். ஏற்கனவே, அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வேளாண் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மூவரில் இருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!