மது போதையில் வாலிபரை குத்திக் கொன்ற 7 பேர்! மேலூரில் பதற்றம்; எஸ்.பி நேரடி விசாரணை! | Youngster killed by 7 in Melur

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (01/08/2018)

கடைசி தொடர்பு:12:35 (01/08/2018)

மது போதையில் வாலிபரை குத்திக் கொன்ற 7 பேர்! மேலூரில் பதற்றம்; எஸ்.பி நேரடி விசாரணை!

மேலூரில், வாலிபர் ஒருவரை மதுபோதையில் இருந்த 7-க்கும் மேற்பட்ட நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கொலையாளிகளைப் பிடிக்க வலியுறுத்தி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், நேரடியாக விசாரணை நடத்திவருகிறார்.

சபரீஸ்வரன்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன், சபரீஸ்வரன். டிரைவரான இவருக்கும் பக்கத்து ஊர் மாற்று சமூகத்தைச் சார்ந்த சிலருக்கும்  முன் விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு ஊரின் அருகில் சபரீஸ்வரன் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட 7-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று, சபரீஸ்வரனை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியது. இந்தக் கும்பல் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

உறவினர்கள் சாலை மறியல்

பலத்த காயத்துடன் கிடந்த சபரீஸ்வரனை அந்தப் பகுதி மக்கள் மேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். ஆனால், ஏற்கெனவே சபரீஸ்வரன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொலையாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கக் கோரி, மேலூர் பேருந்துநிலையம் அருகே இன்று காலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேலூர் பகுதியில் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மதுரை எஸ்.பி மணிவண்ணன் நேரில் சென்று விசாரணை நடத்திவருகிறார் .


[X] Close

[X] Close