ஆளுநர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார்! - காங்கிரஸ், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அதிரடி

இரண்டாவது முறையாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரண்பேடி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மீது காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ-க்கள் உரிமை மீறல் புகாரை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அளித்தனர். அதில், ``சட்டப்பேரவையின் சுதந்திரத்தையும், மாண்பையும் குலைக்கும் வகையில் நீண்ட நாள்களாக பேசி வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் மரியாதையைக் குறைக்கும் வகையில் பேசுவதும், எழுத்துபூர்வமாக உத்தரவிடுவதும் சபையை அவமதிக்கும் செயல். எனவே, இந்தப் புகாரை ஏற்று ஆளுநர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மற்றும் சபை அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், எம்.என்.ஆர்.பாலன், அனந்தராமன், விஜயவேணி மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஆனந்தன் உட்பட 8 பேர் மனு அளித்துள்ளனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது  ஏற்கெனவே அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் உரிமைமீறல் புகார் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!