வெளியிடப்பட்ட நேரம்: 01:43 (02/08/2018)

கடைசி தொடர்பு:01:43 (02/08/2018)

`இந்து அறநிலைய துறை நிர்வாகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்' - ஹெச்.ராஜா!

சிலை கடத்தல் வழக்கில் பெரும் புள்ளிகள் சிக்க இருக்கின்ற காரணத்தால் அவர்களைக் காப்பாற்றவே தமிழக அரசு சிலை தடுப்பு பிரிவு தேவையில்லை என நினைப்பதாக பி.ஜே.பி தேசிய செயலர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியிருக்கிறார். 

ஹெச் ராஜா
           

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பத்திரிகையாளர்களை  சந்தித்த ஹெச்.ராஜா, ``தமிழக இந்து கோயில்களின் பல கோடி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதைத் தமிழக  அரசு  நிறைவேற்றவில்லை. இதைத் தடுக்க வேண்டும். இல்லை என்றால் சென்னையில் உண்ணாவிரதம் இந்த  மாதம் நடைபெறும். அடுத்ததாகத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்கள் முன்பும் உண்ணாவிரதம் நடத்தப்படும். 300 கோடிக்கு மேல் சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாகச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

இந்து அறநிலையை துறை கூடுதல்ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டதை கண்டு தமிழக அரசு அஞ்சுகிறது. சிலை கடத்தல் வழக்கில் பெரும் புள்ளிகள் சிக்க இருக்கின்ற காரணத்தால் அவர்களைக் காப்பாற்ற, தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தேவையில்லை எனக் கொள்கை முடிவு எடுப்பதாகத் தெரிகின்றது. இந்த  வழக்கை சி.பி.ஐ யிடம் மாற்ற நினைப்பது பொன் மாணிக்கவேல் விசாரணையை நீர்த்துப் போக செய்யும் செயலாக இருக்கிறது. எனவே  தமிழக இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில் நிர்வாகத்தைத் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க