`நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு!

'நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு தமிழகமே சிறந்த இடம்' என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்துவருகிறது. நேற்றைய கூட்டத்தொடரின்போது கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ``நியூட்ரினோ மையம் அமைப்பதற்கு தமிழகமே சிறந்த இடமாக இருக்கிறது. குறைந்த அதிர்வு, சுற்றுச்சூழல் தாக்கம் குறைவாக உள்ளது. புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகம் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு சிறந்த இடமாக இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 2010ல் நடைபெற்ற அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், இத்திட்டத்துக்கு அமோக ஆதரவு தெரிவித்தனர். 

எனினும், நியூட்ரினோ திட்டம்குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக அப்பகுதிகளில்  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் கலந்துரையாடலுடன் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இருப்பினும், இத்திட்டம்குறித்து தொடர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வழிவகை செய்யப்படும்" என்றார். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துவரும் வேளையில், மத்திய அரசு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!