தபால்தலை சேகரிப்பால் பொது அறிவு வளரும் - தபால் துறை சார்பில் விழிப்புஉணர்வு!

இந்திய அஞ்சல் துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா’ என்கிற திட்டம்குறித்தும், ‘தை அஃகர்’ என்ற பெயரில் நடைபெறும் கடிதம் எழுதும் போட்டிகள்குறித்தும், தபால்தலை சேகரிப்புகுறித்தும் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்ற வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று மதுரை அத்யாபனா சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற்றது. 

விழிப்பு உணர்வு

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ‘தபால்தலை, நாணயங்கள் சேகரிப்போர் சங்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவுரைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், “பொது அறிவுத்திறன் சார்ந்த எழுத்துப் போட்டிகள் வைத்து, அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, `தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா’ திட்டத்தின்கீழ், மத்திய அரசின் உதவித்தொகையாக மாதம் ஐந்நூறு என வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தால், தபால்தலைகளைச் சேகரிக்கும் பழக்கம் மாணவர்களிடையே ஏற்படுவதோடு, அவர்களின் பொது அறிவும் நினைவாற்றலும் அதிகரிக்கும். ஆகவே, மாணவர்கள் இத்திட்டத்தில் இணைந்து, தேர்வுகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு  மதுரை தபால்தலை, நாணயங்கள் சேகரிப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்” என விளக்கிக் கூறினார்.

தபால் தலை

இவைகுறித்த கூடுதல் தகவல்களுக்கு, மதுரை சேதுபதி பள்ளி அருகில் உள்ள தபால்தலை சேகரிப்பு மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!