குமரி மாவட்டம் இரண்டாக பிரிப்பு; விஜயகுமார் பதவி பறிப்பு- இரண்டு பேருக்கு மாவட்ட செயலாளர் பதவி

ன்னியாகுமரி மாவட்டத்தை கிழக்கு, மேற்கு எனப் பிரித்து, அ.தி.மு.க-வுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.ஏ.அசோகன் - ஜாண் தங்கம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அ.தி.மு.க அமைப்புரீதியாக  இரண்டு மாவட்டங்களாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் ஒன்றாக இணைக்கப்பட்டு, மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சட்டசபைத் தேர்தலில், குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் தோல்வியடைந்ததால், தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டு விஜயகுமார் நியமிக்கப்பட்டார். விஜயகுமாருக்கு நாடாளுமன்ற மேல்சபை எம்.பி பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து, கிழக்கு மாவட்டத்துக்கு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஏ.அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜாண் தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் சட்டமன்றத் தொகுதிகளை கிழக்கு மாவட்டம் எனவும். பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளையும் மேற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டச் செயலாளர் நியமனத்துக்கான அறிவிப்பு, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவில் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!