`கருணாநிதி பிறவியிலேயே ஒரு போராளி!'- ஸ்டாலினிடம் விசாரித்த பினராயி விஜயன் பேட்டி!

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து, அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார். 

பினராயி விஜயன்

தி.மு.க தலைவர் கருணாநிதி, தற்போது உடல்நிலைக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 6 நாள்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலர், காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துச் செல்கின்றனர். இந்நிலையில், தற்போது கேரள முதல்வர் காவேரி மருத்துவமனை வந்து தி.மு.க செயல் தலைவரிடம் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து நலம் விசாரித்தார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கருணாநிதி, பிறவியிலேயே ஒரு போராளி என அனைவருக்கும் தெரியும். பல்வேறு விஷயங்களுக்காக அவர் போராடியுள்ளார். மனஉறுதிதான் அவரது வெற்றிக்குக் காரணம். இதிலும் வெற்றிபெற அந்த மன உறுதி அவருக்கு உதவுகிறது. ஸ்டாலின், கனிமொழி மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் அவரது உடல்நிலைகுறித்து விசாரித்தேன். அவர்கள், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்” என்றார். கருணாநிதியை நேரில் சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, தான் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்ததாகக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!