தமிழகக் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்ற பிரதமர் தனி அக்கறை! மோடியை சந்தித்த வானதி தகவல்

தமிழகக் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்ற தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்ட பிரமதர் மோடிக்கு, வானதி சீனிவாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  “தமிழகத்தில் மட்டும் ஐந்து லட்சம் விவசாயக் குடும்பங்கள், ஒரு லட்சம் தொழிலாளர்கள் கரும்பு விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 4 நான்கு வருடங்களாக ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, 20 சதவிகிதமே சர்க்கரை உற்பத்தி நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக சர்க்கரை ஆலைகள் மூடப்படும் நிலையை மாற்றுவதற்காக எடுத்த முயற்சிகள் பிரதமரின் நேரடிப் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநில அதீத உற்பத்தி மற்றும் அவர்களின் நீர் வளம் இவற்றை தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, தமிழகத்தின் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!