வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (02/08/2018)

கடைசி தொடர்பு:13:50 (02/08/2018)

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிலை கடத்தல்

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜராக கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ - வசம் ஒப்படைக்க தமிழக அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் உங்கள் காவல்துறையினர் மீது நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், `காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது. காவல்துறையினரின் விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. இந்த வழக்குகளை விசாரிக்க சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அவர்களின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வெளிப்படைத் தன்மை இல்லை. அரசுடன் ஒருங்கிணைந்து செல்வதில்லை என்று குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகள் மீதான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.