திண்டுக்கல் சாலையில் திடீரென தீப்பிடித்த கார்!

திடீரென தீ பிடித்த கார்

திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி சந்திப்பு, பரபரப்பான இடம். எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இன்று மதியம் இந்தப் பகுதியில் உள்ள ஆர்த்தி தியேட்டர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், தனது இன்டிகா காரில் திண்டுக்கல் - திருச்சி ரோடு, காட்டாஸ்பத்திரி பகுதியில் இருந்து ஆர்த்தி தியேட்டர் சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று காரின் முன்புறத்திலிருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல், பதறிப்போய் காரை நிறுத்தினார். 

காரில் புகை வருவதைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள், கார் பேனட்டைத் திறந்து பார்த்தனர். உள்ளே பேட்டரி  தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக  பொதுமக்கள் வேகமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புகையைப் பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்தியதால் சக்திவேல் எந்தக் காயமும் இல்லாமல் தப்பினார். சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!