மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தா.பாண்டியன்!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள வி.ஐ.பி-க்கள் பிரிவில் தா.பாண்டியன் சிகிச்சைப் பெற்று வந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், டி.டி.வி.தினகரன், வேல்முருகன், ஜி.கே.மணி, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து,  உடல்நலம் குறித்து விசாரித்தனர். இன்று, தொடர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்புகிறார்.

தா பாண்டியன்

இதுகுறித்துப் பேசிய மருத்துவமனை டீன் ஜெயந்தி, 'ஜூலை மாதம் 28-ம் தேதி கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத்தலைவரும், இயக்குநருமான கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு முறை டயாலிசிஸ் செய்யப்பட்டது. தொடர் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி, இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். கடந்த சில வருடங்களாக, அவருக்கு நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு (Chronic kidney disease) பாதிப்பு இருப்பதால், குறிப்பிட்ட நாள்கள் இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்திருக்கிறோம். மேலும், அடுத்த வாரம் உடல்நிலை முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்வதற்காக ரிவியூவுக்காக வரச் சொல்லியிருக்கிறோம்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!