கமலின் விஸ்வரூபம்-2 படத்தை வெளியிடத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

கமல் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் 2

கடந்த 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6.90 கோடி ரூபாயும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால், இந்தப் பணத்தைக் கொண்டு மர்மயோகி படத்தைத் தயாரிக்காமல் `உன்னைபோல் ஒருவன்’ படத்துக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த 6.90 கோடியைக் கேட்டு சாய்மீரா நிறுவனம் சார்பில், ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, விஸ்வரூபம்-2 படத்தை வருகின்ற ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில்  மர்மயோகி படத்துக்கு கொடுத்த சம்பளம் ரூபாய் 4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடி ரூபாய் கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனப் பிரமிட் சாய்மீரா நிறுவனம் புதிய வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!