லஞ்ச வழக்கில் சிஆர்பிஎஃப்  டி.ஐ.ஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி!

லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

சிஆர்பிஎப் 

சென்னை ஆவடியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயங்கிவருகிறது. இங்கு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி  வருகின்றனர். இந்த வீரர்களுக்கு, பிரத்யேகமான போர் உடைகளை மதூர் என்ற  தனியார் நிறுவனத்திடமிருந்து ரிசர்வ் போலீஸ் நிர்வாகம் வாங்கிவந்தது. மதூர் என்டர்பிரைஸ் நிறுவனத்துக்கு, பொருள்களை சப்ளை செய்ததற்கு வழங்கவேண்டிய பணத்தை சிஆர்பிஎஃப் நிர்வாகம் வழங்காமல் காலம் கடத்திவந்தது. இதற்காக, பணத்தை விரைவில் தரவேண்டும் என்றால், அப்போதைய டிஐஜி நாகராஜன், தனக்கும் தன்னுடன் உள்ள மற்ற சில அதிகாரிகளுக்கும்  லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டதாகவும், இதற்காக உதவி எஸ்.ஐ., ஜான்சன் தேவகுமார் ஆகியோருக்கு மதூர் என்டர்பிரைஸ் நிறுவன இயக்குநர் விஜய் கண்ணா, லஞ்சம் வழங்கியதாகவும் கூறப்பட்டது. 

இதுதொடர்பான வழக்கில், போலீஸ் அதிகாரிகளுக்கு  எதிராக  சி.பி.ஐ 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்தது.  இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகன், மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மூவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த விவகாரம், மத்திய ரிசர்வ் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!