பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பிய திருடர்கள்

தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே ரோந்துப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிவிட்டுத் தப்பிய திருடர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. போலீஸாரே திருட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருக்கிறார்களா? என பொதுமக்களே குற்றம் சாட்டும் நிலை உருவானது. இந்நிலையில், நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அல்லிநகரம் காவல் ஆய்வாளர் சண்முகலெட்சுமி, சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரைப் பிடித்து விசாரணைசெய்துள்ளார். முன்னுக்குப்பின் முரணாக மூவரும் பதிலளித்துள்ளனர். அவர்கள் கொண்டுவந்திருந்த சிறிய மூட்டையை சோதனைசெய்தபோது பணம், சில்லரைக் க்சுகள் இருந்துள்ளன. கூடவே ஒரு கத்தியும் இருந்துள்ளது. சந்தேகமடைந்த ஆய்வாளர் சண்முகலெட்சுமி, மூவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றபோது சண்முகலெட்சுமியின் கையை கடித்துவிட்டு ஒருவர் தப்பித்துவிட்டார். நிலைதடுமாறிய சண்முகலெட்சுமியை அருகில் இருந்த போலீஸார் மீட்க, அந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு இன்னொருவரும் தப்பியுள்ளார். இருவரும் தப்பிய நிலையில், ஒருவர் மட்டும் கைதுசெய்யப்பட்டு காவல் நிலையத்து அழைத்துவரப்பட்டார்.

கோவில்

அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட ஒருவரிடம் நடத்திய விசாரணையில், அல்லிநகரம், அன்னஞ்சி பகுதிகளில் உள்ள கோயில்களில் உண்டியலை உடைத்துத் திருடியது  தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் தேடிவருகின்றனர். மேலும், இதுவரை எந்தெந்த கோயில்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருவதாக போலீஸார் கூறுகின்றனர். கையில் காயமடைந்த ஆய்வாளர் சண்முகலெட்சுமிக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!