வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (03/08/2018)

கடைசி தொடர்பு:13:30 (03/08/2018)

சர்வதேச சந்தைகளில் காளை ஆதிக்க முடிவும், இந்தியாவில் அதன் தாக்கங்களும்: நாணயம் விகடன் கான்க்ளேவ்

கோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ், ஆகஸ்ட் 18, 19 ஆம் தேதிகளில் நடக்கிறது. ‘விஷன் 2025’என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நிபுணர்கள் பலர்  இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உங்கள் மத்தியில் உரையாட இருக்கிறார்கள். 

 

விகடன்

இந்த கான்க்ளேவின் முதல் நாளன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், சர்வதேச மற்றும் இந்தியப் பொருளாதார நிலைகுறித்து பல்வேறு நிபுணர்கள் பேசவிருக்கிறார்கள்.கோவை கான்க்ளேவில் https://www.vikatan.com/news/miscellaneous/132706-naanayam-vikatan-business-conclave-to-be-held-at-coimbatore.html  சர்வதேச பொருளாதார வல்லுநர் அனந்த நாகேஸ்வரன் பங்கேற்கிறார். இவர், '2009- 2018 சர்வதேச சந்தைகளில் காளையின் ஆதிக்கம் முடிவும், இந்தியாவில் அதன் தாக்கங்களும்'(The End Of Bull Cycle Of 2009-18 For Global Markets - Implications For India) என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

 

கான்க்ளேவ்

இந்த உரை, நாம் சர்வதேச பங்குச் சந்தை, இந்திய பங்குச் சந்தை, பங்குகள்குறித்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். முன் பதிவு செய்ய http://bit.ly/nvconclave