அயனாவரம் சிறுமி வழக்கை விசாரித்த உதவிக் கமிஷனர் திடீர் மாற்றம்

சென்னையில் 4 உதவிக் கமிஷனர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர், அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கை விசாரணை செய்த உதவி கமிஷனர்.

கமிஷ்னர் அலுவலகம்

சென்னை சேலையூர் போலீஸ் உதவிக் கமிஷனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, ராயப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். . ராயப்பேட்டையில் உதவிக் கமிஷனராக இருந்த வினோத் சாந்தாராம், சேலையூருக்கு இடமாற்றப்பட்டுள்ளார். 

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றிய உதவி கமிஷனர் பாலமுருகன், அயனாவரம் உதவி கமிஷனராக இடமாற்றப்பட்டுள்ளார். அயனாவரத்தில் உதவிக் கமிஷனராக இருந்த சிராஜிதீன் மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 உதவி கமிஷனர்கள் இடமாற்றதுக்கு சில காரணங்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதாவது, அயனாவரத்தில் உதவி கமிஷனராகப் பணியாற்றிய சிராஜிதீன், சிறுமி பாலியல் விவகாரத்தில் அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, அவருக்குப் பலவகையில் பிரஷர் வந்தது. இருப்பினும் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில்தான் சிராஜிதீன் மதுவிலக்கு அமலாக்கத் துறைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். ராயப்பேட்டை உதவி கமிஷனர் வினோத் சாந்தராம், காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் சம்பவத்தில் துரிதமாகச் செயல்பட்டார். தற்போது அவரும் இடமாற்றப்பட்டுள்ளார். காவலர் ராஜவேலு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் உதவிக் கமிஷனர் வினோத் சாந்தாராமிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகே இடமாறுதல் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக உள்விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!