ரகுபதி ஆணையம் கலைப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது தொடர்பாக நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை கலைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்

 

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தை எதிர்த்தும் ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரியும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு ரகுபதி ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த ஆணையத்துக்கு செய்யப்பட்ட செலவு எவ்வளவு, இதுவரை எவ்வளவு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

புதிய தலைமை செயலகம்

ரகுபதி ஆணையத்தைப் பொறுத்தவரை, இதுவரை 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் தடை விதித்திருந்த மூன்றாண்டு காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறிக்கிட்ட நீதிபதி, இது வீண் செலவு இல்லையா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ஆணையத்தின் செயல்பாடுகளை அரசு கண்காணித்திருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என தெரிவித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆணையங்களையும் கலைப்பது குறித்து 4 வார காலத்துக்குள் தமிழக அரசு ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். ஆணையத்தின் முக்கியத்துவத்தைக் கருதி குறிப்பிட்ட கால அளவுக்குள் விசாரணையை முடிக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அரசு பங்களாக்களில் செயல்படும் விசாரணை ஆணையத்தை அரசு அலுவலகங்களுக்கு மாற்ற வேண்டும். ரகுபதி விசாரணை ஆணையம் கலைக்கப்படுகிறது. ரகுபதி ஆணையத்துக்கு வழங்கி வந்த அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும். அவரிடம் உள்ள ஆவணங்களை அரசிடம் கொடுக்க வேண்டும். ஆவணங்களில் முறைகேடு குறித்து, முகாந்திரம் இருந்தால் கருணாநிதி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம்' என அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!