சாலையில் கிடந்த பர்ஸ்... உரியவரிடம் சேர்த்த கோவை போக்குவரத்து போலீஸ்..!

கோவையில், சாலையில் கிடந்த பர்ஸை சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்துள்ளார் போக்குவரத்து காவலர் ராக்கி மகேஷ்.

ராக்கி மகேஸ்

கோவை, பாப்பாநாயக்கன்பாளையம் மணி ஸ்கூல் அருகே, சாலையில் மணி பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்ட மகாத்மா காந்தி மண்டப நிர்வாகிகள், அதில் எட்டு க்ரெடிட் கார்டுகள், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் சில போட்டோக்கள் இருந்துள்ளன. இதையடுத்து, அருகில் பணியிலிருந்த போக்குவரத்து போலீஸ் ராக்கி மகேஷ் என்றழைக்கப்படும் மகேஷ்வரனிடம் அதை ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து ராக்கி மகேஷ் கூறுகையில், “முதலில் இந்தத் தகவலை கன்ட்ரோல் ரூமில் தெரிவித்துவிட்டேன். அந்தப் பர்ஸ் சிட்கோ பகுதியைச் சேர்ந்த லிஜோ என்பவருக்குச் சொந்தமானது. அதே சிட்கோ பகுதியில் இருக்கும் என் நண்பர் ரவிக்குத் தகவல் தெரிவித்தேன். அவர், நேரடியாக லிஜோவின் வீட்டுக்கே சென்று தகவலைக் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பர்ஸின் உரிமையாளர் பெங்களூரில் வேலை செய்வதால், அவரின் பெற்றோர் நேரடியாக வந்து, பர்ஸை பெற்றுக்கொண்டனர்” என்றார்.

லிஜோவின் பெற்றோர் கூறுகையில், “போலீஸ்னா என்னமோன்னு நினைச்சோம். ஆனா, இந்தப் போலீஸ் ரொம்ப கருணையா நடந்துக்கிறார். இந்த உதவிய மறக்கவே மாட்டோம். அவருக்கு மிக்க நன்றி” என்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!