வெளியிடப்பட்ட நேரம்: 01:44 (04/08/2018)

கடைசி தொடர்பு:01:44 (04/08/2018)

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டுத் தொடங்கியது காலண்டர்கள் தயாரிக்கும் பணி!

பட்டாசு, தீப்பெட்டித் தொழிலுடன் அச்சகத்தொழிலும் சிவகாசியில் முக்கியமானதாகும். 

பட்டாசு, தீப்பெட்டித் தொழிலுடன் அச்சகத்தொழிலும் சிவகாசியில் முக்கியமானதாகும். ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு 2019-ம் ஆண்டுக்கான காலண்டர்களின் புதிய ஆல்பத்தை, வெளியிட்டு காலண்டர்கள் தயாரிக்கும் பணியை இன்று தொடங்கினார்கள்.

ஆடிப் பெருக்கு


காலத்துக்கு ஏற்றாற்போல் அதி நவீன அச்சகங்கள் நிறைந்த சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்கள் இந்தியா முழுவதும்  அனுப்பப்படுகிறது. இது பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் பல மாடல்களில் தினசரி காலண்டர்கள் தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 100 கோடிக்கு வர்த்தகமும் நடைபெறுகிறது. 

சிவகாசி காலண்டர்


2019-ம் ஆண்டுக்கான காலண்டர்களில் தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகளை நினைவூட்டும் வகையில் தினசரி காலண்டர்களை அறிமுகப்படுத்துள்ளனர். ரியல் ஆர்ட், சில்வர் பாயில்ஸ், பாயில்ஸ் கோல்டு, லேசர் பாடலில்ஸ், டை கட்டிங், வி.ஐ.பி காலண்டர், 3டி காலண்டர் என 50-க்கும் மேற்பட்ட மாடல்களில் காலண்டர்கள் தயாரிக்கிறார்கள். 2019-ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிக்கும் பணியை  ஆடிப் பெருக்கை முன்னிட்டு இன்று தொடங்கியுள்ளனர். காகிதம், அட்டை, பிரின்டிங் இங், தொழிலாளர்களில் கூலி உயர்வு, போன்றவற்றாலும் ஜி.எஸ்.டி-யாலும் காலண்டரின் விலை 20 முதல் 25 சதவிகிதம் வரை உயரும் என உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கூறுகிறார்கள். பலவித பிரச்னைகள் இருந்தாலும் சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்களுக்கு வெளிநாடுகளிலும் டிமாண்ட் உள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் சிவகாசி காலண்டரை விரும்பி வாங்குகிறார்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க