`ஜப்பானைவிட நமது மருத்துவர்கள் சிறப்பானவர்கள்’ - சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் உரையாற்றிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஜப்பானைவிட தமிழ்நாட்டு மருத்துவர்கள் சிறப்பானவர்கள் என்ற தொனியில் பேசி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.

விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் தலைமையில் நேற்று நடைபெற்ற விழாவில் உரையற்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஜப்பான் போன்ற நாடுகளுக்கு நான் சென்றபோது, அங்கு மருத்துவத்துறையில் பல்வேறு நவீன மருத்துவக் கருவிகள் பயன்படுத்துவதில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் நோயாளிகளைக் கையாள்வதிலும் தமிழக மருத்துவர்களுக்கு ஈடில்லை என்பதை என்னால் அறிய முடிந்தது” என அவர் சொன்ன தகவலை கேட்டு மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன், கேத்லேப், கோபால்ட் தெரபி உள்ளிட்ட வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்” என்றார். இவரது பேச்சு புதுக்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழ்நாட்ல உள்ள அரசு மருத்துவமனைகளோட நிலை எல்லோருக்கும் தெரியும். அமைச்சர் மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார். நோயாளிகள் கிட்ட அன்பா அக்கறையா பேசினதெல்லாம் அந்தக் காலம் எனக் கமென்ட் அடிக்கிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!