இன்ஜினீயருக்கு அதிகாலையில் அதிர்ச்சி கொடுத்த ஆட்டோ கொள்ளையர்கள் 

கொள்ளை

சென்னை திருமங்கலத்தில் இன்று அதிகாலையில் ஆட்டோவில் வந்த கொள்ளையர்கள், டீ வியாபாரி, இன்ஜினீயர் ஆகியோரிடம் பணம், பைக்கைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், என்.வி.என் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர், சைக்களில் டீ வியாபரம் செய்துவருகிறார். மங்கலம் காலனி அருகே இன்று அதிகாலை டீ விற்றுக்கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இரண்டு பேர் முருகனிடம் டீ கேட்டுள்ளனர். டீ கொடுத்த முருகனிடமிருந்த பணப்பையை ஆட்டோ கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து முருகன், திருமங்கலம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னிடமிருந்த 3,000 ரூபாயை ஆட்டோ கொள்ளையர்கள் வழிப்பறி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அதே ஆட்டோ கொள்ளையர்கள், திருமங்கலம் பகுதியில் பைக்கில் சென்றவரின் பைக்கைப் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்தும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இதையடுத்து, சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கிஷோர். இவர், அம்பத்தூரில் உள்ள சாப்ஃட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் பணி முடிந்து பைக்கில் திருமங்கலம் பகுதியில் பைக்கில் வந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பைக் மற்றும் பர்ஸை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருமங்கலம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்று பேரிடம் ஆட்டோகொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!