வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (05/08/2018)

கடைசி தொடர்பு:17:06 (05/08/2018)

சாலையில் நடந்து செல்லும் பெண்ணின் நகை திருட்டு : வெளியான சிசிடிவி காட்சிகள்!

டெல்லியில் சாலையில்நடந்து செல்லும் பெண்ணிடம் செல்போன், நகை திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

சிசிடிவி

சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை,பணத்தை திருடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பட்டப்பகலில் கூட இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த குற்றங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வந்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. இது போன்ற நகை பறிப்பு சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த காடசியில், சாலையில் பெண் ஒருவர் நடந்து  சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவரை பின் தொடர்ந்து வரும் நபர், அக்கம் பக்கம் யாரும் உள்ளனரா என பார்க்கிறார். யாரும் இல்லாத சூழலில், தனியாக சென்று கொண்டிருந்த அந்த பெண்ணின் கழுத்தை நெரிக்க முயல்கிறார். இதையடுத்து அந்தபெண்ணிடமிருந்த செல்போன், நகை உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு, அவனுடைய கூட்டாளி ஓட்டி வரும் பைக்கில் ஏறி செல்கிறார். இதனால் நிலைகுழைந்து போன அந்த பெண் சாலையில் விழுந்துகிடக்கிறார். இது போன்று அந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. கடந்த 29-ம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.