``அ.தி.மு.க தலைமைக்கு ரஜினி வர இடமில்லை” -அமைச்சர் செல்லூர் ராஜு! | Minister Sellur Raju press meet in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (05/08/2018)

``அ.தி.மு.க தலைமைக்கு ரஜினி வர இடமில்லை” -அமைச்சர் செல்லூர் ராஜு!

"அதிமுகவின் தலைமைப்பொறுப்புக்கு ரஜினி வர இடமில்லை" என்று அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

செல்லூர் ராஜு

"ரஜினி கமல் போன்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. அதிலும் ரஜினி, அரசின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகிறவர்" என்று சமீபத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்திருந்தார். இதுபோன்ற கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் உருவாகி வரும் நிலையில்,  இன்று மதுரையில் அதிமுக பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, "நாளைய தினம் ரேசன் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருக்கும். அதிமுகவின் தலைமைப்பொறுப்புக்கு ரஜினி வருவதற்கு  இடமில்லை, அது தவறான தகவல். அதிமுகவை பொறுத்தவரையில் யாராக இருந்தாலும் தொண்டராக இணைந்து படிப்படியாக முன்னேறி வர வேண்டும்" என்று கூறினார்.

ரஜினியைப்பற்றி அதிமுக அமைச்சர்களுக்குள்ளேயே இரண்டு விதமான கருத்துக்கள் இருப்பதால் அதிமுகவினர் குழப்பமடைந்துள்ளனர்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ரஜினி தலைமையிலான அதிமுக கூட்டணியை உருவாக்க பாஜக முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பாண்டியராஜன், செல்லூர் ராஜுவின் கருத்துக்கள், அதை குழப்பும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இதனால், அதிமுகவினரும், ரஜினி மன்றத்தினரும் குழப்பத்தில் உள்ளார்களாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க