``விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் குறித்துக் கேள்வி கேட்கவில்லை" - திவாகரன் தகவல்!

திவாகரன்

தஞ்சையில் அண்ணா திராவிடர் கழக நிறுவனத் தலைவர் திவாகரன் செய்தியாளர்களிடம், ``ஆறுமுகசாமி விசாரணைக்கு நான் சென்றேன். ஆனால், அதில் ஜெயலலிதா மரணம் குறித்து என்னிடம் கேள்வி கேட்கவில்லை. மற்ற கேள்விகள்தான் கேட்டார்கள். அதற்கு நான் பதில் கூறினேன்.

தினகரன் மன்னார்குடி கூட்டத்துக்கு ஆர்.கே நகர் போன்றே குக்கர் கொடுப்பதாக டோக்கன் கொடுத்து ஆட்களை அழைத்து வந்துள்ளார். எப்படி கொடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. பணத்தை வாரி இறைக்கிறார், இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை, ஆர்.கே. நகர் டோக்கன் என்பது தனி எபிசோடு அது பற்றி தனியாக பேசிக்கொள்வோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் ஜெயிப்பேன் என்று அனைவரும் கூறுகிறார்கள். நாளை முதல் நானும் அதையே பின்பற்றப் போகிறேன். நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் தேர்தல் குறித்து கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அரசுக்கு விருப்பமில்லை, அதனாலேயே தள்ளிப்போடுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடக்காதால் மத்திய அரசின் நிதி வரவில்லை. இதன் காரணமாகவே தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியது.

பொன்.மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி. வழக்கை ஏன் சி.பி.ஐ-க்கு மாற்றுகிறார்கள்  என்று தெரியவில்லை. அரசின் ஒவ்வொரு காரியமும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு ஏதோ ஒரு கோணத்தில் சென்று கொண்டுள்ளது. பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள எல்லாப் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துத்தான் வேலைக்கு வருகிறார்கள் அதை எடுப்பதற்கு இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!