10-ம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய ஆசிரியர்; வழிப்பறி வழக்கு பதிவு செய்த காவல்துறை..! | School student sexual abused by teacher in Tiruvallur

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (06/08/2018)

கடைசி தொடர்பு:08:48 (06/08/2018)

10-ம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய ஆசிரியர்; வழிப்பறி வழக்கு பதிவு செய்த காவல்துறை..!

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர், 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்தச் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சுதாகர். இவர், 10 -ம் வகுப்பு பயிலும் மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் பள்ளியிலேயே தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அச்சிறுமி கடந்த 4 நாள்களாக தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக மகளின் நிலையை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மகளிடம் நடந்த சம்பவத்தை கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

குடும்ப மானத்தை கருதி காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. ஆனால், மருத்துவமனை சார்பாக காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் சுதாகர் மீது பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக வழக்கு போடாமல் ஆராம்பாக்கம் போலீசார் அவர் மீது சாதாரண வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்மீது, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.