திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடைபெற்ற ஆடிக்கிருத்திகை விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து அரோகரா கோஷம் எழுப்பி வந்து முருகப்பெருமானை வணங்கிச் சென்றனர். பக்தர்களின் வசதிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருத்தணியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நகருக்கு வெளியே தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  

ஆனால், கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக எந்தச் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை எனப் பக்தர்கள் குற்றம்சாட்டினர். குடிக்கத் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை என்றும் கழிவறைகளில் தண்ணீர் இல்லையென்றும் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்கவில்லை என்றும் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர். பக்தர்கள் சாலைகளிலும் பஸ்நிலையம் ரயில் நிலையங்களில் தங்கி உள்ளனர். மொட்டை அடிக்கக் கட்டணம் முப்பது ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள் மொட்டை அடிக்கும் இடத்துக்குச் சென்றவுடன் மொட்டை அடிப்பவர் கூடுதலாக முப்பது ரூபாய் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாமியின் தரிசனக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பக்தர்கள் மனம் விரும்பிய படி சாமி தரிசனம் செய்யமுடியவில்லை என்று ஆதங்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!