வெளியிடப்பட்ட நேரம்: 05:20 (06/08/2018)

கடைசி தொடர்பு:07:29 (06/08/2018)

ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் ரத்து ஏன்? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

ஆகஸ்ட், 6-ம் தேதி  போராட்டம் நடத்தப் போவதாக நேற்றுமுன் தினம், அதிகாரபூர்வமாக ரேசன்கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அந்தப் போராட்டம், தற்போது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரேசன் ஊழியர் போராட்டம், மந்திரி செல்லூர்ராஜூ கருத்து

ரேசன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள், போதுமான அளவில் ஸ்டாக் இல்லை என்ற குற்றச்சாட்டு, ரேசன் கடைகளின் மீது இருந்து வருகிறது. ரேசன் பொருள்களை வாங்க வரும் பொதுமக்களுக்கும், ரேசன் கடை ஊழியர்களுக்கும் இதனால் பல இடங்களில் கடும் வாக்குவாதம் ஏற்படுவது அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் ரேசன் கடை ஊழியர்கள் ' உணவு பொருள்கள் ஸ்டாக்' உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. ஆகஸ்ட், 6-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக நேற்றுமுன் தினம், அதிகாரபூர்வமாக ரேசன்கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அந்தப் போராட்டம், தற்போது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,  ``ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உணவுப் பொருள்களும் ரேசன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆகவே ரேசன் கடைகள் வழக்கம்போல் இயங்கும்" என்று தெரிவித்தார். அமைச்சர் செல்லூர் ராஜு, கூறியுள்ளதை, போராட்ட அறிவிப்பு செய்திருந்த தொழிற்சங்கத்தினர் மறுக்கவில்லை. ``தமிழக அரசுடன் கூட்டுறவு சங்கப் பதிவாளர் மற்றும் கூடுதல் பதிவாளர் நடத்தியப் பேச்சுவார்த்தையை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றனர்.