``நெல்லை மண்ணும் தமிழ் மொழியும் எனக்கு ஸ்பெஷல்'' - மனம் திறந்த தோனி  

மிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரும் இப்போது பாப்புலராகி வருகிறது. சென்னை அணியின் கேப்டன் தோனி போன்றவர்களும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை பிரபலப்படுத்த களத்தில் இறங்கி வருகின்றனர். நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் கோவை கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியைத் தொடங்கி வைக்க அவர் சென்றிருந்தார். பின்னர்,  தென்காசி சென்ற தோனி குண்டாறு அணை மற்றும் அருவிகளைக் கண்டு ரசித்தார். சாதாரண ஜீப்பில் பயணித்த தோனியுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். தோனி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தோனி

நெல்லைப் பயணம் குறித்து பி.டி.ஐ செய்தியாளர்களிடம் பேசிய தோனி, ``நெல்லை மண் எனக்கு முக்கியமானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவாகக் காரணமாக இருந்த இந்தியா சிமென்ட்ஸ் உருவான மண் இது (இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளர் ஸ்ரீநிவாசன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்தான்) இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை உருவான இங்கு வந்தது மனதுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்டகாலமாக இந்த நிறுவனத்துடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். அதனால், நெல்லை மண் என் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கிறது. அதேபோல், தமிழ் மொழியையும் நான் கற்று வருகிறேன். அடுத்த சீசன் ஐ.பி.எல் தொடர் முடிவதற்குள் தமிழில் பேசி விடுவேன்'' என்று கூறியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் (மார்க்கெட்டிங்) என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!