பல்கலைக்கழக  ஊழல்களுக்குத் தனி விசாரணை ஆணையம்! - டாக்டர். கிருஷ்ணசாமி கோரிக்கை

பல்கலைக்கழகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் நிதியைவிட, சர்வதேச நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் யாருக்கும் தெரியாமல் பல கோடி ரூபாய்களை வாரி வழங்கிவருகின்றன.

'' அண்ணா பல்கலைக்கழகத்தில், மறுகூட்டலில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வருகின்ற செய்திகள், உயர்கல்வியின் தரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டன'' என்கிறார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. 

டாக்டர். கிருஷ்ணசாமி

ராஜபாளையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர்.கிருஷ்ணசாமி, " அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்துவருவதை சுட்டிக்காட்டிவருகிறேன். துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு, மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவதில் ஊழல், மறுகூட்டலில் முறைகேடு என ஊழல்மயமாகவே உயர்கல்வி நிறுவனங்கள் மாறிவிட்டன. பல்கலைக்கழகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் நிதியைவிட, சர்வதேச நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் யாருக்கும் தெரியாமல் பல கோடி ரூபாய்களை வாரி வழங்கிவருகின்றன. அந்த நிதிகள் என்னவாயிற்று என்பதை  விசாரிக்க, பல்கலைக் கழகங்களுக்குத் தனி விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில், ஒன்றரை வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தேர்தலை நடத்துவதற்கு மாநில அரசு தொடர்ந்து அவகாசம் கேட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்கான அடிப்படைக் காரணங்களை வெள்ளை அறிக்கையாக மாநில அரசு வெளியிட வேண்டும். கடந்த முறை வெளியிடப்பட்ட வார்டு வரையறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக கவுன்சிலர் பதவிகள் பிரிக்கப்பட்டுள்ளன'' என்றார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!