கனிமொழி, பொன்முடி மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை..! #karunanidhi

காவேரி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்ற கனிமொழி மற்றும் பொன்முடி ஆகியோர் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினர்.

கனிமொழி

காவேரி மருத்துவமனையைச் சுற்றி ஏராளாமான தொண்டர்கள் குவிந்து, கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனிடையே தி.மு.க எம்.பி கனிமொழியும் காவேரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச்சென்றார்.

மு.க.ஸ்டாலின்

காவேரி மருத்துவமனையிலிருந்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச்சென்றார். துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ க்களும் புறப்பட்டுச்சென்றனர்.

ஸ்டாலின்

 

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக தொண்டர்கள் மருத்துவமனையைச் சுற்றி குவிந்த வண்ணமே உள்ளனர்.

தி.மு.க எம்.எல்.ஏ க்கள், டி.ஆர்.பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு வருதற்காக தி.மு.க எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவேரி மருத்துவமனைக்கு சென்று, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து  விசாரித்து வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. 

நிதின் கட்காரி

மத்திய தரைவழிப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அறிந்து கொள்வதற்காக சென்னை வந்தடைந்தார். இன்னும் சற்று நேரத்தில் அவர் காவேரி மருத்துவமனைக்குச் செல்ல உள்ளார்.

தே.மு.தி.க-வைச் சேர்ந்த சுதீஷ், காவேரி மருத்துவமனைக்குச் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார். இதையடுத்துப் பேசிய அவர், `கருணாநிதியின் உடல்நிலைகுறித்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்' என்று தெரிவித்தார்.

சுதீஷ்

காவேரி மருத்துவமனை அருகில் தி.மு.க தொண்டர்கள் குவிந்துவருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், காவேரி மருத்துவமனைக்குச் செல்லும் வழிகள் மாற்றப்பட்டுள்ளது.
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் காவேரி மருத்துவமனைக்குச் சென்று, கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், `தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஏற்ற இறக்கமாக உள்ளது' என்று தெரிவித்தார்.

முத்தரசன்

காவேரி மருத்துவமனைக்கு தி.மு.க நிர்வாகிகள் மட்டுமல்லாது, பல கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும்  வரத் தொடங்கியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் முத்தரசன், வைரமுத்து, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் வருகைதந்துள்ளனர். 

காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்து, மருத்துவமனை இருக்கும் பகுதியில் தி.மு.க தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

காவேரி மருத்துவமனை

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 27-ம் தேதி இரவு திடீர் ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர், அவரது உடல்நிலைகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நலம்குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான அறிக்கையில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!