காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி என்ன? | kauvery

வெளியிடப்பட்ட நேரம்: 06:05 (07/08/2018)

கடைசி தொடர்பு:07:04 (07/08/2018)

காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி என்ன?

``காவேரி மருத்துவமனைக்கு வரும் வி.ஐ.பி.களின் பாதுகாப்பு கருதியே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி வரவிருப்பதாக தகவல் வந்ததால், உரிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

 காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் 'பின்னடைவு' ஏற்பட்டுள்ளதாக மருத்துமனை தரப்பில் நேற்றிரவு அறிக்கை வெளியானது. மருத்துவ அறிக்கையில், சொல்லப்பட்டிருந்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே திரண்டனர். அதேபோல் சென்னையின் முக்கியச் சாலைகளில் இனம்புரியாத பதற்றத்துடன் பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் குவியத் தொடங்கினர். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில், போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக தகவல் வெளியானதால், தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பதற்றமும், கவலையும் நிலவியது. நேற்றிரவு 12 மணிக்குப் பின்னர், போலீஸார், காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியை முடுக்கி விட்டனர். மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த தொண்டர்களைத், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தடுப்பு வளைவுக்கு வெளியே அவர்களை நிறுத்தினர்.

போலீஸ்

போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரிகள், ``காவேரி மருத்துவமனைக்கு வரும் வி.ஐ.பிகளின் பாதுகாப்பு கருதியே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி வரவிருப்பதாக தகவல் வந்ததால், உரிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதுபோன்ற அவசரமான காலகட்டங்களில் பந்தோபஸ்து பணிக்கு அதிகளவு போலீஸார், பணியில் இருக்க வேண்டும் என்பதால், போலீஸார் விடுப்பு எடுக்காமல் இருக்கவும், விடுப்பில் இருப்பவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பவும் அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படுவதும் வழக்கமான ஒரு நிகழ்வுதான்" என்றனர்.


[X] Close

[X] Close